by Vignesh Perumal on | 2025-05-14 12:24 PM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (மே 14, 2025) டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றி, பாதுகாப்பு விவகாரங்கள், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த உடன்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நான்காவது முறையாக இந்த மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், சமீபத்தில் இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை குறித்தும், எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்த உடன்பாடு குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தின் முடிவில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!