by Vignesh Perumal on | 2025-05-14 10:54 AM
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் இணை ஆணையர் மண்டலம், குளத்தூர் சரகம் சார்பில் கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சட்டமன்ற அறிவிப்பு 2025-2026 அறிவிப்பு எண்.63-ன் படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படாத கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000/-லிருந்து ரூ.1,00,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள பூசாரி நலவாரிய உறுப்பினர்களுடன் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பதிவு சேர்க்கை நிறைவுற்றவுடன், இத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒருகால பூஜைத்திட்ட திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு நிகரான ஊக்கத் தொகை கிராமக் கோயில் பூசாரி நலவாரிய உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.
இதன் முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படாத கிராமப்புற திருக்கோயில்களின் பூசாரிகளுக்கான சிறப்பு முகாம், குளத்தூர் சரக ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் முகவரி: கீரனூர், ஜெய்ஹிந்த் நகர், மேலபுதுவயல் ரோடு, ஸ்டேட் பேங்க் எதிர்புறம்.
முகாம் நடைபெறும் நாட்கள்:
14.05.2025 (இன்று)
15.05.2025
16.05.2025
எனவே, குளத்தூர் சரகத்திற்கு உட்பட்ட கிராமக் கோயில்களின் பூசாரிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பூசாரி நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு, தஞ்சாவூர் இணை ஆணையர் மண்டலத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!