by Vignesh Perumal on | 2025-05-13 11:49 PM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், இன்று (மே 13, 2025) ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கையன்கோட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அந்த வேனில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சரக்கு வேனில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த லக்கையன்கோட்டையைச் சேர்ந்த ஆனந்த் (எ) ஆனந்தராஜ் (வயது 41) மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பட்டையா (எ) பட்டத்தரசன் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் ஆகியவற்றை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!