by Vignesh Perumal on | 2025-05-13 11:40 PM
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவர் பெங்களூருவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு வந்த ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தை நம்பி, அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை அவர் தொடர்பு கொண்டார்.
அப்போது பேசிய நபர்கள், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று வேளாங்கண்ணிக்கு ஆசை வார்த்தைகள் கூறினர். மேலும், வாட்ஸ்அப் மூலம் அவருக்கு ஆன்லைன் வர்த்தகம் செய்வது குறித்து பயிற்சி அளித்தனர். முதலீடு செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதால், வேளாங்கண்ணி பல்வேறு தவணைகளில் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.48 லட்சம் செலுத்தினார்.
பணம் செலுத்திய பிறகு அந்த நபர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேளாங்கண்ணி, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களிடம் புகார் அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் மேற்பார்வையில், சைபர் கிரைம் ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையில் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் லாய்டுசிங் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது ஓசூரைச் சேர்ந்த மாதப்பா மகன் குமரேசன் (வயது 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரேசனை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!