by Muthukamatchi on | 2025-05-13 07:59 PM
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி உட்பட்ட பகுதியில் என் எஸ் கே பி பள்ளி அருகாமையில் மேட்டுக்கல் தெரு ஓடை பகுதியில் சுகாதார மற்ற முறையில் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் குப்பைகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றார்கள் . இது தொடர்பாக பலமுறை கூடலூர் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் மற்றும் ஆணையாளரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று 12.05.2025 மாலை 5 மணி அளவில் குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. எனவே இதுபோன்று சம்பவங்கள் அடுத்து அடுத்து கூடலூரில் பல இடங்களில் நிகழ்ந்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரி இதை ஏன் கண்டு கொள்ளவில்லை. காற்று மாசுபடுவதோடு சுகாதாரக் கேடு ஏற்பட்டு பள்ளி மாணவர்களும் பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சமூக ஆர்வலர் Adv. ஆர். மலைச்சாமி BA LLB .