by Vignesh Perumal on | 2025-05-13 02:48 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்காக படித்து வரும் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஏப்ரல் 2025 மாதத்தில் நூலகத்தை அதிகளவில் பயன்படுத்திய மாணவர் மு.பிச்சைமணிக்கு, தெய்வத்திரு சௌந்தரபாண்டியன் பத்மாவதி நினைவாக இன்சூரன்ஸ் எஸ். பால்ராஜ் அவர்கள் ரூ. 500 ஊக்கத்தொகையை வழங்கினார்.
இதேபோல், மூத்த வழக்கறிஞர் திருமலை வெங்கடேசன் அவர்கள், நூலகத்தை அதிகம் பயன்படுத்திய மற்றொரு மாணவியான எம். மகேஸ்வரிக்கு ரூ. 500 ஊக்கத்தொகையை வழங்கினார்.
இன்று நடைபெற்ற இந்த ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், நூலக ஆர்வலர் அன்புக்கரசன், வழக்கறிஞர் மணி கார்திக், நல்நூலகர் குமரன் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், அனைவருக்கும் நல்நூலகர் ஆ.சவடமுத்து நன்றி தெரிவித்தார். இந்த ஊக்கத்தொகை திட்டம், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், நூலகத்தை அதிகளவில் பயன்படுத்தவும் உந்துதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!