| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் கோயம்புத்தூர்

பெண்களுக்கு ரூ. 85 லட்சம் இழப்பீடு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

by Vignesh Perumal on | 2025-05-13 01:22 PM

Share:


பெண்களுக்கு ரூ. 85 லட்சம் இழப்பீடு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு இன்று (மே 13, 2025) கோவை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிமன்ற வளாகத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், நீதிமன்ற வளாகத்தின் முன்பு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பை வழங்கினார்.

நீதிபதி நந்தினி தேவியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தீர்ப்புக்குப் பின்னர் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்புக்காக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். குற்றவாளிகள் அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் நிம்மதி பெருமூச்சு விடப்பட்டது. தண்டனை விவரங்கள் மாலை வெளியாகும் என்பதால் பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது. தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment