இன்டர்ன்ஷிப் மோசடி..! பெண்ணை கூட்டுப் பலாத்காரம்..! இருவர் கைது..!
by Vignesh Perumal on |
2025-05-13 12:59 PM
Share:
Link copied to clipboard!
ஹைதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி, சென்னையில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மற்றும் ஹரி ஆகிய இருவரை பச்சுப்பள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது: "சென்னையில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு, அவரது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மற்றும் ஹரி ஆகியோர் ஹைதராபாத்தில் நல்ல நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்தப் பெண் ஹைதராபாத்திற்கு வந்துள்ளார்.
அங்கு நிஜாம்பேட்டையில் உள்ள தங்களது பிளாட்டிற்கு அப்பெண்ணை அழைத்துச் சென்ற அஜய் மற்றும் ஹரி, அவருக்கு மது கொடுத்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருவரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான அந்தப் பெண் பின்னர் பச்சுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஜய் மற்றும் ஹரி ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.