by Vignesh Perumal on | 2025-05-12 09:35 PM
பிரதமர் மோடி அவர்கள் இன்று உரையாற்றுகையில், பாகிஸ்தானின் பகவல்பூர் மற்றும் முரிட்கே பகுதிகள் பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக செயல்பட்டு வருவதாகக் கடுமையாகச் சாடினார். மேலும், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி டிரோன்களை ஏவ முடியாத அளவுக்கு அந்நாடு பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதச் செயல்களின் மூளையாகச் செயல்பட்ட முக்கியக் குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பாகிஸ்தான், அதற்கு மாறாக இந்தியா மீது தாக்குதல் தொடுத்தது கண்டிக்கத்தக்கது என்றார்.
இந்தியப் படைகள் நடத்திய துல்லியமான தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர் என்பதை அழுத்தமாகத் தெரிவித்த அவர், பகல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நமது படையினர் தக்க பதிலடி கொடுத்ததாகவும் கூறினார்.
நவீன போர் முறைகளில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என்று திட்டவட்டமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!