by Vignesh Perumal on | 2025-05-12 09:18 PM
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 13) முதுமலைக்கு வருகை தரவுள்ளதால், முதுமலை யானைகள் முகாமை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு மாலை நேரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தருகிறார். அங்கு யானைகள் பராமரிப்பு மற்றும் முகாமின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக, நாளை மாலை யானைகள் முகாமை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மதிய நேரங்களில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் யானைகள் முகாமுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!