by Vignesh Perumal on | 2025-05-11 12:01 PM
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில், முத்துமாரியம்மன் கோயில் தேர் வடம் பிடிக்கும் உரிமை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
திருமாவளவன், குறிப்பிட்ட சமூக மக்களிடம் மட்டுமே வடகாடு முத்து மாரியம்மன் கோயில் தேரின் வடம் தொடும் உரிமை உள்ளது என்று பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினரிடையே மோதல் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், வடகாடு இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக அவதூறு பரப்பியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமாவளவனின் இந்த பேச்சு, வடகாடு பகுதியில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!