by Vignesh Perumal on | 2025-05-10 07:16 PM
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவி வந்த பதற்றத்தை குறைக்கும் வகையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்காவின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது அறிவையும், சிறந்த நுண்ணறிவையும் பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள். இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும், "பாகிஸ்தான் மற்றும் இந்தியா உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பாகிஸ்தான் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக எப்போதும் பாடுபட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று மாலை பாகிஸ்தான் ராணுவ செயல்பாடுகளின் தலைமை இயக்குனர் இந்திய ராணுவ செயல்பாடுகளின் தலைமை இயக்குனரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தரப்பினரும் அனைத்து விதமான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டனர். மேலதிக பேச்சுவார்த்தை மே 12ஆம் தேதி நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்த அறிவிப்பு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதற்றத்தை தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
சாத்தான்குளம் சம்பவம் - 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு ! உச்சபட்ச தண்டனை வழங்க கோரிக்கை !!
மது விற்பனைக்கு கட்டுப்பாடு ! மதுப்பிரியர்கள் அப்செட் !! டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல் !!!
46 சவரன் நகை திருடிய ஆசாமி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !
பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டம்...! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு...!
கலெக்டர், எஸ்பி...! வாக்கு எண்ணும் மையத்தில் அதிரடி ஆய்வு...!