by Vignesh Perumal on | 2025-05-09 07:57 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகாசி, ஆனை கூட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் ஸ்ரீநிதிஸ்குமார் (வயது 21) என்பவரை வத்தலகுண்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு புகார் வந்ததை அடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஸ்ரீநிதிஸ்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் ஸ்ரீநிதிஸ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த வழக்கு குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!