by admin on | 2025-02-02 05:49 AM
தெரிந்த செய்தி! தெரியாத உண்மை!
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு *சமைத்த அசைவம்* எடுத்துச் செல்லும் பொழுது, கரித்துண்டும் நம்முடன் பயணிக்கும். ( சில சமயங்களில் *இரும்புப் பொருளும்* உடன் வைப்பர் ). அது எதற்காக என்று நாம் இன்று வரை சிந்தித்திருப்போமா......
தெரிந்து கொள்வோம், வாருங்கள்......
கறிக்குழம்பு கொண்டு செல்லும்போது கரிக்கட்டை போடும் பாரம்பரியம் நம் முன்னோர்களின் அறிவியல் சார்ந்த காரணம் தெரியுமா.....?
நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஒவ்வொரு பழக்க வழக்கங்களிலும் ஆழமான அறிவியல் காரணங்கள் பொதிந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் கறிக்குழம்பு கொண்டு செல்லும்போது கரிக்கட்டையை பயன்படுத்தும் முறை. பலர் இதனைவெறும் மூடநம்பிக்கை என நினைத்தாலும், இதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகள் வியக்க வைக்கின்றன.கரிக்கட்டையின் வேதியியல் தன்மை*
கரிக்கட்டை என்பது தூய கார்பன் (C) மட்டுமே கொண்ட ஒரு இயற்கை பொருள். இந்த *கார்பனுக்கு வாசனைகளை உறிஞ்சும் தன்மை உண்டு. கறிக்கொழம்பில் இருந்து வரும் மசாலா வாசனையை கரிக்கட்டை உறிஞ்சி, அதனை கூடைக்குள்ளேயே தக்க வைக்கிறது* . வாசனைவெளியே பரவாமல் தடுப்பதற்கான இந்த அறிவியல் முறையை நம் முன்னோர்கள் கண்டறிந்தனர்.முற்காலத்தில் காட்டு விலங்குகளுக்கு அருகில் மக்கள் வாழ்ந்தனர்மாமிச உணவும்உண்டு வந்தனர்.மாமிச உணவின் வாசனைகாட்டு விலங்குகளை ஈர்க்கும் என்பதை அவர்கள் அனுபவத்தில் அறிந்திருந்தனர். *நாய்கள், நரிகள், ஓநாய்கள் போன்ற விலங்குகள் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் உணவின் வாசனையை மோப்பம்பிடித்து வரக்கூடியவை* . இந்த ஆபத்தை தவிர்க்கவே கரிக்கட்டையை பயன்படுத்தினர்.
கரிக்கட்டையின் பன்முக பயன்பாடுகள்*
கரிக்கட்டையின் பயன்பாடு உணவு பாதுகாப்போடு மட்டும் நின்றுவிடவில்லை. கிராமப்புற மக்கள் இன்றும் கரிக்கட்டை மற்றும் சாம்பலை பல் விளக்க பயன்படுத்துகிறார்கள். கரியில் உள்ள கார்பன்வாய்த் துர்நாற்றத்தை போக்குவதோடு, பற்களில் பூச்சிகள் உருவாவதையும் தடுக்கிறது.
மல்லிகைப் பூவும் கரிக்கட்டையும்*
பெண்கள் மல்லிகை பூ சூடும்போது, சிறிய கரிக்கட்டை துண்டை தலையில் வைப்பது வழக்கம். இதுவும் அதே அறிவியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. கரிக்கட்டை பூவின் வாசனையை நீண்ட நேரம் தக்க வைக்க உதவுகிறது.
நவீன அறிவியலும் உறுதிப்படுத்துகிறது.
கார்பன் ஒரு சிறந்த வாசனை உறிஞ்சி
( *Odor Absorber* )
என்பது நவீன அறிவியலாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் வாயு மாசு தடுப்பான்களிலும் (Gas Masks), நீர் சுத்திகரிப்பு முறைகளிலும் கார்பன் பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்கள் அறிந்திருந்த இந்த உண்மையை நவீன ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.நம் முன்னோர்கள் கையாண்ட எந்த ஒரு முறையும் காரணமின்றி இருக்கவில்லை. அவர்களின் அனுபவஅறிவு, இன்றைய அறிவியலோடு ஒத்துப்போகிறது என்பதே இதன் சிறப்பு. அவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை எளிய முறையில் வழக்கங்களாக மாற்றி நமக்கு கடத்தியுள்ளனர். இந்த அறிவை புரிந்துகொண்டு, அதன் மதிப்பை உணர்ந்து பின்பற்றுவது நமது கடமையாகும்.
தெரிந்து கொள்வோம்......
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!