by admin on | 2025-02-01 08:58 PM
தேனி மாவட்டம் தேனி வட்டம் கொடுவிலார்பட்டி கிராமம் அரண்மனை புதூரில் உள்ள சர்வே எண் 15/1 ல்சுமார் 5 ஏக்கர் 36சென்ட் நிலம் அரண்மனை புதூர் கிழக்குத் தெருவில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் லேட் சடையாண்டி என்பவருடைய பெயரில் பட்டா உள்ளது இந்த நிலத்தை அரண்மனை புதூரில் உள்ள Ex ஊராட்சி மன்ற தலைவராகஇருந்த கே. ராஜசேகரன் என்பவருடைய மகன் உதயராஜா ராஜசேகர்னுடைய தம்பி ரவி இருவரும் சேர்ந்து மேற்படி நிலத்திற்கு சம்பந்தமில்லாத 15ஏ என்ற ஒரு மோசடியான ஆவணத்தை உற்பத்தி செய்து மேற்படி 15/1 ஐசப் டிவிஷன் செய்ததாக காட்டி மோசடியாக பட்டா பெற்றுள்ளார்கள் ஆக இந்த பட்டா மாறுதல் செய்யப்பட்டதற்கான ஆர்டிஆர் பைல்தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காணாமல் போய்விட்டது அதேபோல 15 Aஎன்ற சர்வே நம்பர் ரயில்வே டிரேக் ஒட்டி உள்ள பகுதிகளை குறிக்கக்கூடிய ஒரு நிலம் என சொல்லப்படுகிறது ஆக கொடுவிலார்பட்டி கிராமத்தில் இந்த 15 A என்ற சர்வே நம்பரோ - நிலமோ இல்லை, என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது.இந்த மோசடி சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் மாவட்ட எஸ்பி அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பிசி பட்டிகாவல் நிலைய அதிகாரிகளுக்கும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது 35 ஆண்டுகால தொடர்ச்சியான மகசூலை எடுத்துக்கொண்டு 2 கோடி ரூபாய் வரை இதுவரையில் தராமல் நிறுத்தடித்து தரக்கூடிய பணத்தை மோசடி செய்து ஏமாற்றி வருவார்கள் மீது உரிய நடவடிக்கை கோரி மேற்படி நிலத்தின் உரிமையாளரான சடையாண்டி மகன் முருகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார் இந்த புகார் சம்பந்தமாக காவல் நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் மேற்படி மோசடி நபர்கள் பண பலம் ஆள் பலம் மிக்கவர்கள் என்பதால் சட்டத்தை தன் பக்கம் வளைத்து மேலும் மோசடியில் ஈடுபடக்கூடும் என்பதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போஸ்டர் விரைவில் ஒட்டப்பட உள்ளது
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!