by Vignesh Perumal on | 2025-05-06 07:41 AM
திண்டுக்கல் நகரில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 22 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலன் என்பவர் நேற்று (05.05.2025) ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேற்கு ஆரோக்கிய மாதா தெருவைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஆரோன் ஆனந்த் (22) என்பவர் திடீரென பாலனை வழிமறித்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் பாலனிடம் பணம் பறிக்க முயன்றதாகவும் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலன் உடனடியாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பணம் பறிக்க முயன்றது ஆரோன் ஆனந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆரோன் ஆனந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தி முனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆரோன் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!