| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனியில் இழப்பீடு வழங்காத இரண்டு அரசு பஸ்கள் ஜப்தி

by admin on | 2025-02-01 05:27 PM

Share:


தேனியில் இழப்பீடு வழங்காத இரண்டு அரசு பஸ்கள் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி : 

தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை ,பூந்தோட்டத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கள்ளிப்பட்டியில் மரக்கடை நடத்தி வந்தார். கடந்த 2019ம் ஆண்டு கள்ளிப்பட்டி செவன்த் டே பள்ளி அருகில் கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 07.07.2021ம் ஆண்டு பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திலகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடாக ₹ 33,33.600 வழங்க உத்தரவிட்டிருந்தார். ஆனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் இழப்பீட்டுத் தொகையை வழங்க தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த பெரியகுளம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சமீனா 18.02.25 அன்றைய நிலவரப்படி 44,000.00 வழங்க உத்தரவு பிறப்பித்தார். தொகையினை மீண்டும் வழங்க தாமதம் செய்ததால் மீண்டும் கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 2 கோவை மண்டல அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் பெயரில், கோர்ட் ஆமினா ரமேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் K.G. பாலாஜி, நாக பாலாஜி ஆகியோர் 2பஸ்கலை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். இதனால், பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் நீண்ட நேரத்திற்குப் பின் வேறு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.



நிருபர் சதீஷ்குமார் தேனி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment