by admin on | 2025-02-01 04:05 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சோத்துப்பாறைஅணைக்கு செல்லும் சாலையில் தண்டுபாளையம் காளியம்மன் கோவில் முதல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி வராக நதியின் கரையோரங்களில் தடுப்பு சுவர் கட்டி, மழை நீர் வடிகால் அமைத்து ரோடு போடுவதற்க்கு பெரியகுளம் உட்கோட்ட தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் கீழ் ₹ 1 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், சாலை அமைக்கும் பணிக்கான ஆயத்தப் பணிகள் துவங்கிய நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றபடவில்லை. மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை. மேலும் தடுப்பு சுவர் கட்டாமல் பாதுகாப்பற்ற நிலையில்,
திடீரென நேற்று, 31.1.2025 நள்ளிரவு தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்பொது கனமழை பெய்தது
தொடர்ந்து ரோடு போடும் பணி தடையின்றி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் யாரும் பணி நடைபெற்ற போது இல்லை
குறிப்பிட்ட காலத்திற்கு ரோட்டை சேதப்படுத்தக் கூடாது என்பதால், பாதாள சாக்கடை, மற்றும் குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த நகர் பகுதி பொதுமக்களுக்கு இணைப்பு வழங்க முடியாத சூழல் உள்ளது. நகராட்சி சார்பாகபாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் முடிவடையாத நிலையில், நள்ளிரவில் தார் சாலை அமைக்கும் பணி அவசரகதியில் தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்று உள்ளது .
பொழுது
இச்சாலையைக் வழியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நீதிமன்றங்கள், சப் கலெக்டர் குடியிருப்பு, நீதிபதிகள் குடியிருப்பு, அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் தாலுகா அலுவலகம்,, தபால் நிலையம் நகராட்சி, போலீஸ் ஸ்டேஷன், கால்நடை மருத்துவமனை, சிறைச்சாலை, பொதுப்பணித்துறை அலுவலகங்கள், சப் ரிஜிஸ்டர் ஆபீஸ், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள், காவலர்கள் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
போக்குவரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை திட்ட மதிப்பீட்டின்படி முழுமையாக பணி செய்யாமல் அவசரக் கதியில் தரமற்ற பணி செய்த காண்ட்ராக்டர் மீதும் பணி நடைபெற்ற போது கண்டுகொள்ளாமல், எதுவும் தெரியாதது போல் இருந்த பெரியகுளம் உட்கோட்ட நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் மீது கலெக்டர் சஜீவனா உரிய விசாரணை நடத்த வேண்டும்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!