| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

செவிலியர் படுகொலை...! 6 மணி நேரத்தில் துப்பு துலக்கிய காவல்துறை..! குவியும் பாராட்டுக்கள்...!

by Vignesh Perumal on | 2025-05-01 05:30 PM

Share:


செவிலியர் படுகொலை...! 6 மணி நேரத்தில் துப்பு துலக்கிய காவல்துறை..! குவியும் பாராட்டுக்கள்...!

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருப்பூர் போலீசார் துரிதமாக செயல்பட்டு ஆறு மணி நேரத்திற்குள் வழக்கில் துப்பு துலக்கியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று (மே 1, 2025) காலை இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தகவலறிந்து நகர காவல் ஆணையராக திரு. ராஜேந்திரன் ஐ.பி.எஸ்., துணை ஆணையர் தீபா சத்யன் ஐ.பி.எஸ்., உதவி ஆணையர் ஜான், இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் எஸ்.ஐ. ரஜினிகாந்த் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தலை மற்றும் கைகள் நசுங்கிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர். கொலை செய்யப்பட்ட செவிலியர் யார், எந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார் என்ற விவரங்கள் ஆரம்பத்தில் தெரியவில்லை.

காவல் ஆணையர் தீபா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலைக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியாத நிலையில், வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கிய போது அது குடும்பப் பிரச்சனை என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் நடந்த மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் போலீசார் சல்லடை போட்டு தேடினர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இந்த தொடர் மற்றும் தீவிர விசாரணையின் விளைவாக, போலீசார் கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் ஆறு மணி நேரத்திற்குள் கண்டறிந்துள்ளனர்.

போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கொலையாளியை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாரின் துரித நடவடிக்கை பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment