by Vignesh Perumal on | 2025-05-01 11:46 AM
மே 1 ஆம் தேதி, உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரை சாலையில் உள்ள மே தின நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், தொழிலாளர் தின உறுதிமொழியை ஏற்று தொழிலாளர்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இது சாமானியர்களின் ஆட்சி. உங்களுடன் நிற்கும் உங்களின் ஒருவன் தான் நான். திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5-ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளோம். உங்களுக்கு உழைக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு தொழிலாளர்கள் உறுதியாகவும், பக்கபலமாகவும் இருக்க வேண்டும்" என்று தொழிலாளர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், திராவிட மாடல் ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்ட அவர், "கடந்த 4 ஆண்டுகளில் 28 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ₨.2,467 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது" என்று குறிப்பிட்டார். அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் உறுதி அளித்தார்.
தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அவர் உறுதி அளித்தார். மே தினத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மே தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொழிலாளர் தின விழாக்கள் மற்றும் பேரணிகள் நடைபெற்றன.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!