by admin on | 2025-02-01 04:08 AM
திருநாங்கூர்
11 திவ்ய தேசங்கள் கருட சேவை
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 11 வைணவத் தலங்களிலிருந்தும் திருமால் கருட வாகனத்தில் கொண்டுவரப்பெற்று திருநாங்கூர் கோயிலில் 11 கருட சேவை தரிசனம் நடைபெறுகிறது. தை அமாவாசைக்கு மறுநாள் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்நாளின் இரவு 11 கருட வாகன சேவை நடைபெறுகிறது.
கருட சேவை அல்லது கருட வாகன சேவை என்பது வைணவத் தலங்களில் திருமால் கருட வாகனத்தில் எழுந்தருளும் அற்புதமான நிகழ்வாகும்.
இந்நிகழ்வு வைணவக் கோயில்களின் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறுகிறது. திருப்பதி, திருக்குடந்தை, காஞ்சீபுரம், தஞ்சை
போன்ற இடங்களில் நடைபெறும் கருடசேவை மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.
திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல நிலவுலகிலும் இருக்க ஆவல் கொண்டார்.
அதனைஅறிந்த கருடன், வைகுண்டத்தில் உள்ள ஏழு மலையையும் பெயர்த்தெடுத்து திருப்பதியில் கொண்டு சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார். இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது..!
கருடன் ! மங்கள வடிவமானவன்*.
*பறவைகளின் அரசன்*.
கருடனைத் தரிசிப்பது சுபசகுனம். ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி.
இன்றளவும் கும்பாபிஷேகத்தின்போது எத்தனை விதமான பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் பூஜையின்போது கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது.
கருடனைத் தரிசிக்கும்போது நம் மனம் நிறைவடைகிறது. நாராயணனே நமக்கு ஆசி வழங்குவது போன்று நாம் மன நிறைவு கொள்கிறோம். ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவது தனிச்சிறப்பு...!
கருடன்,
கச்யபர் - விநதை
தம்பதிக்கு இரண்டாவது மகனாவார்.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.
கருடாழ்வார், மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன்,
வேதஸ்வரூபன், வைனதேயன் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.
மகாவிஷ்ணுவின் ஸ்தலங்களில்
*'பெரிய திருவடி"*
என்று போற்றப்படுபவர்.
பிறருக்குத் தீங்கிழைப்பவர்கள்,
தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள்.
எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே *'கருட புராணம்*'...!!
திருநாங்கூர் பதினொரு திவ்யதேசங்கள்..
கருடசேவை...!!
திருநாங்கூர் பதினொரு தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் சோழநாட்டுத் திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரிலுள்ள ஆறு திவ்ய தேசங்களையும்...
இவ்வூரைச் சுற்றி அருகருகே, ஒன்று அல்லது ஒன்றரை மைல் தூரங்களில் உள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து வழங்கப்படும் பெயராகும்...!
ஒவ்வொரு ஆண்டும்
தைஅமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் கருடசேவை
திருவிழாவுக்கு இந்த 11 கோயில்களின் உற்சவர் சிலைகளும் எடுத்துவரப்படும். இந்த 11 தலத்துப் பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் பாசுரத்தால் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார்கள்.
அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் பாசுரத்தால் மங்களாசாசனம் செய்வார். இந்தக் கருட சேவையை காண்பதற்கு அனைத்து மாநிலஙகளிலிருந்தும் பக்தர்கள் கூடுவர்.
(திருநாங்கூருக்குள்ளேயே இருக்கும் கோயில்கள்)
1.திருக்காவளம்பாடி
2 திருஅரிமேய விண்ணகரம்
3 திருவண்புருடோத்தமம்
4 திருச்செம்பொன் செய்கோயில்
5 திருமணிமாடக் கோயில்
6 திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூருக்கு வெளியே இருக்கும் கோயில்கள்)
1 திருத்தேவனார்த் தொகை
2 திருத்தெற்றியம்பலம்
3 திருமணிக்கூடம்
4 திருவெள்ளக்குளம்
5 திருப்பார்த்தன் பள்ளி
ஆண்டுதோறும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. திருநாங்கூர் சுற்றி உள்ள வயல் வெளிகளில்..
கருடசேவைக்கு (முதல்நாள் நள்ளிரவில்)
காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று சத்தத்தைக் கேட்ட உடன் திருமங்கையாழ்வார்பிரவேசித்துவிட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும்,திருமங்கையாழ்வாரால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் மிகுந்த நெல் விளையும் என்பதும் இப்பகுதியில் நிலவும் நம்பிக்கையாகும். பொதுவாகவே,நாகதோஷம்.
முதற்கொண்டு சகல தோஷங்களும் கருடசேவை தரிசனத்தை கண்டால் நீங்கும்.
கருட பகவான் அருளாசியாலே
வாழ்க நலமுடன்
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!