by Vignesh Perumal on | 2025-04-25 02:11 PM
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காக்காதோப்பூர் பிரிவில் இன்று அன்பரசன் என்பவர் பெங்களூரில் இருந்து மதுரையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வேடசந்தூர் நான்கு வழிச்சாலையில், மதுரையிலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று திடீரென உள்ளே நுழைந்தது.
இதில் எதிர்பாராத விதமாக கார் அரசு பேருந்தின் மீது மோதியதில், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் வந்த அன்பரசன் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் காவல் ஆய்வாளர் வேலாயுதம் விபத்து குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும், காயமடைந்த இருவரையும் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!