by Muthukamatchi on | 2025-04-24 06:24 PM
ஆண்டிபட்டி நகர்பகுதி ஊர்காத்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் .தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகர் பகுதிக்குட்பட்ட பாப்பம்மாள்புரம் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஊர்காத்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு
சித்திரை முதல் நாளில் இருந்து காப்புக்கட்டி விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.அக்னி சட்டி எடுத்து ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள் கைகளில் அக்னி சட்டி ஏந்தியும், வாயில் அலகு குத்தியும் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.நகர் பகுதி முழுவதிலும் இருந்து வந்திருந்து திரளான பக்தர்கள் இந்த விழாவினை கண்டு அம்மனை வழிபட்டனர்.இதையடுத்து ஊர்காத்த மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!