by admin on | 2025-01-30 06:01 PM
தேனி மாவட்டம் வைகை அணையில் கோவை காவல் பயிற்சி பள்ளியில் 1984 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் காவலர்கள் சந்தித்தனர்.
1984ம் ஆண்டு கோவை காவல் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலராக சுமார் 200 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அதில் பலர் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்து சார்பு ஆய்வாளர், இன்ஸ்பெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு சென்றனர். இந்த நிலையில் கோவை காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற காவலர்கள் ஒன்றிணைத்து சங்கமாக உருவாக்கி ஆண்டு தோறும் சங்கத்தின் சார்பில் விழா நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பாலர் இல்லத்தில் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் முன்னாள் காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராமச்சந்திரன், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சங்கத்தை சேர்ந்தவர்கள் காவல் துறையின் பணியின் போது நடந்த நிகழ்வுகள், அனுபவங்கள் குறித்து உரையாடினார்கள். இந்த விழாவில் இறந்த பென்ஷன் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலையில் அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். தற்போது பயிற்சியில் உள்ள காவலர்களுக்கு சட்ட ரீதியாகவும், களப்பயிற்சி அளிக்கவும், மனநல ஆலோசனைகள் மேற்கொள்ளவும் அந்தந்த மாவட்டங்களில் சங்கத்தின் சார்பில் செய்து தர தயாராக உள்ளோம் என்று அரசுக்கு தெரிவித்தனர். மேலும் சங்கத்தை சார்ந்தவர்களிடம் வருடத்திற்கு ரூபாய் ஆயிரம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சங்கத்தைச் சார்ந்த மகன், மகள் திருமணத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதும், உறுப்பினர் இயற்கை மற்றும் அசாதாரண சூழ்நிலையில் இறந்தால் சங்க உறுப்பினர்களிடம் ரூ.2 ஆயிரம் நிதி வசூல் செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கவும் ,சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சங்கத்தின் மூலம் வாட்ஸ் அப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சங்க உறுப்பினர்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் வாழ்த்துச் செய்தி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது .குறிப்பாக திருமண நாளில் குழு உறுப்பினர்களின் துணைவியாருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதின் மூலம் ,அவர்களின் 40 ஆண்டு கால சேவை நினைவில் இருக்கும் என்று தெரிவித்தனர்.இதில் கோவை, சென்னை, மதுரை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிருபர் பிரவின் ஆண்டிபட்டி - தேனி மாவட்டம்
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!