by Vignesh Perumal on | 2025-04-23 09:46 PM
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக, இந்திய விமானப்படை வீரர்கள் சேலத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று சேலத்தில் மூன்று ஹெலிகாப்டர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் இந்த தீவிர பயிற்சியை மேற்கொண்டனர். இந்த பயிற்சியின்போது, ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்துவது மற்றும் தீவிரவாத கும்பலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவது போன்ற போர் யுக்திகள் குறித்து வீரர்கள் பயிற்சி பெற்றனர்.
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில், நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே, விமானப்படை வீரர்களின் இந்த அவசர மற்றும் தீவிர பயிற்சி கருதப்படுகிறது. எந்தவொரு அசம்பாவித சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் வீரர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் என்று விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சேலத்தில் நடைபெற்ற இந்த திடீர் பயிற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த பயிற்சி இந்திய விமானப்படையின் தயார் நிலையை எடுத்துக்காட்டுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!