by Vignesh Perumal on | 2025-04-23 09:34 PM
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நாளை (24.04.2025) நிறைவடைய உள்ளன. இதனைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (25.04.2025) முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியை ஆசிரியர்கள் முடித்து, தேர்வு முடிவுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் வரும் 30.04.2025 (புதன்கிழமை) என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டான 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி (02.06.2025), திங்கள் கிழமையன்று மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால், அவர்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பொழுதைக் கழிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!