by Muthukamatchi on | 2025-04-23 05:05 PM
தேனி மாவட்டத்தில் 525 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் உள்ளன.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் " நம்ம ஊரு கதை" என்ற நிகழ்வு நடைபெற்றது. 8 ஒன்றியங்களில் இருந்து 444/525 கதைகள் அந்தந்த வட்டாரங்களில் சமர்ப்பிக்கப்பட்டது.இக்கதைகளை வட்டார அளவில் குழு அமைத்து மதிப்பீடு செய்து மாவட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது.வட்டார அளவில் மதிப்பீடு மூலம் வழங்கப்பட்ட மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாவட்ட அளவில் 5 கதைகள் பெரியகுளம்(3)மற்றும் தேனி (2) மையங்கள் தேர்வாயின. 5 மையங்களின் விபரம் பின்வருமாறு:
பெரியகுளம் ஒன்றியம் 1. சில்வார்பட்டி மையம் 2. சருத்து பட்டி மையம் 3. மருகால்பட்டி மையம் தேனி ஒன்றியம் 4.அரண்மனைபுதூர் மையம்5.ஊஞ்சாம்பட்டி மையம் இந்த 5 மையங்களில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 129.இம்மாணவர்கள் அனைவருக்கும் 16.04.25 அன்று பெரியகுளம் மற்றும் தேனி வட்டார வளமையத்தில் பரிசளிப்பு விழா மதிப்பிற்குரிய உதவி திட்ட அலுவலர் மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.கபிலா , மாவட்ட முன்னணி தன்னார்வலர் சு.சுபா லட்சுமி ,வட்டார மேற்பார்வையாளர்கள் இரா.முருகேசன், இரா.மனோரஞ்சிதம், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரோஸி, மணிமாறன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கோப்பைகள் மற்றும் அவர்களை ஊக்குவித்த தன்னார்வலர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ.500/-வழங்கப்பட்டது.
'
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!