by N S Boopalan on | 2025-04-23 04:40 PM
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.. இந்நிலையில் இவ்வளவு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளது.
1.திங்கட்கிழமைக்குள் அமைச்சரா ?? அல்லது ஜாமினா ?? என உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
2. செந்தில் பாலாஜி புகார்தாரருடன் செட்டில்மெண்ட் செய்து கொண்டது நினைவில்லையா எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.
3. இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது என்றும் வேண்டுகோளை நிராகரித்தது.
4. ஜாமீன் பெற்று பிறகு அமைச்சர் ஆனது நேர்மையான செயல் அல்ல. எனவும்,
5. அமைச்சராக இல்லை என்று ஜாமின் பெற்றீர்கள் ஆனால் பிறகு அமைச்சராகி கொண்டீர்கள் என்றும் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளது.
6. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதை கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
7. உச்ச நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி இப்படித்தான் சாதகமாக பயன்படுத்திக் கொள்வாரா ??எனவும் கண்டன கேள்வி எழுப்பி உள்ளனர்.
8. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுத்து தவறு செய்து விட்டோம், ஜாமீன் வழங்கியது தவறு என கருதுகிறோம் என உச்ச நீதிமன்றம் அதிரடி.
9. ஜாமீன் வழங்கிய போது அமைச்சராக அனுமதி அளிக்கவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
10. அமைச்சரான பின்பு சாட்சியை கலைக்க மாட்டார் என்ற கருத்தை ஏற்க இயலாது எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
11. அவருடைய வழக்கறிஞர் கபில் சிவில் அவர்களின் வாதத்தை ஏற்று அமைச்சர் பதவியா அல்லது ஜாமீனா என திங்கட்கிழமை வரை செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
12. திங்கட்கிழமை தங்களது முடிவை கூறுவதாக கபில் சிபில் திட்டவட்டம்.
13. அவரது கருத்தை ஏற்று திங்கள் கிழமை வரை வழக்கை ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தற்போதைய கால சூழ்நிலையில் திங்கள்கிழமைக்குள் தனது பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிடுவார் என்று கருதப்படுகிறது. இல்லையென்றால் உச்சநீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்து விடும் என்ற காரணத்தினால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் இது திமுகவிற்கு மிகவும் நெருக்கடியை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!