by Vignesh Perumal on | 2025-04-23 03:35 PM
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உளவு பிரிவை (Intelligence Bureau - IB) சேர்ந்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை பாதுகாப்புத் துறை மறுத்துள்ளது.
பயங்கரவாதிகள் உளவுத்துறை அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக சில ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில், பாதுகாப்புத் துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மணிஷ் ரஞ்சன் என்ற உளவுத் துறை அதிகாரி மட்டுமே உயிரிழந்துள்ளார். மற்ற உளவுத் துறை அதிகாரிகள் யாரும் கொல்லப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உளவு பிரிவைச் சேர்ந்த மேலும் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று பாதுகாப்புத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த விளக்கம், உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் அளிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!