by Vignesh Perumal on | 2025-04-23 03:22 PM
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் கேரள உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த மூன்று நீதிபதிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், ஜி. கிரீஷ் மற்றும் பி.ஜி. அஜித்குமார் ஆகியோர் தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பஹல்காமில் இருந்து புறப்பட்டுச் சென்றதால், இந்த பயங்கர சம்பவத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உட்பட பலர் உயிரிழந்தனர். கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் சில மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தை விட்டுச் சென்றது பெரும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!