by Vignesh Perumal on | 2025-04-23 03:01 PM
திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு நிலவியது. அந்த போஸ்டர்களில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள முக்கிய வாசகங்களில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழ்நாடு அரசே! ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முயற்சி செய்யாதே! சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டு மக்களின் கருத்தை பதிவு செய், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே! மக்களின் மனசாட்சியை அறிந்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை செய் போஸ்டரின் கீழே இவன்: இளைஞர் மன்றம், பொதுமக்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள், திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருப்பது தெளிவாகிறது. ஊராட்சி மக்கள் தங்கள் கிராமங்களை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், இது தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டி மக்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் போஸ்டரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் மக்களின் எண்ணங்களை அறிந்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த போஸ்டரில் இளைஞர் மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களால் திண்டுக்கல் நகரில் சிறிது பரபரப்பு ஏற்பட்டதுடன், ஊராட்சி இணைப்பு குறித்த விவாதமும் எழுந்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!