by Vignesh Perumal on | 2025-04-23 02:38 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலின் கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக மிஸ்டர் ஒயிட் வேஷ்டி நிறுவனம் சார்பில் புதிய பேட்டரி கார் சேவை இன்று தொடங்கப்பட்டது. இது கிரிவலப் பாதையில் இயக்கப்படும் 28-வது பேட்டரி பேருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்டர் ஒயிட் வேஷ்டி நிறுவனம் சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த பேட்டரி காரை கோயில் நிர்வாகத்திடம் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த பேட்டரி காரில் ஒரே நேரத்தில் 22 பக்தர்கள் வரை பயணிக்க முடியும்.
இந்த புதிய பேட்டரி கார் சேவையை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். இனி கிரிவலப் பாதையில் நடந்து செல்ல சிரமப்படும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் இந்த பேட்டரி கார் சேவையை பயன்படுத்தி பயனடையலாம்.
கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் மிஸ்டர் ஒயிட் வேஷ்டி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளனர். கிரிவலப் பாதையில் மேலும் ஒரு பேட்டரி கார் இணைந்திருப்பது பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!