by Muthukamatchi on | 2025-04-23 02:15 PM
ஒருங்கிணைந்த பள்ளியின் முக்கியக் கூறுகளில் ஒன்றான *நம்பள்ளி நம்பெருமை* நிகழ்வில் தேனி மாவட்டம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1970ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்றவர்களின் முன்னாள் மாணவர் சந்திப்பு வட்டார வளமைய கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாணவர்கள் சந்தித்துக்கொண்டனர். அந்த சந்திப்பில் 53 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். அந்த 53 அரசுப்பள்ளி மாணவர்களுல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் ஒருவர் என்பது பெருமையானது. அவரது பள்ளி நாட்களின் நினைவுப் பகிர்வு ஒரு சாமானியர் இன்று தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகத் திகழ்வதை பலரும் பெருமிதத்தோடு வாழ்த்தினர். இதில் முத்தாய்ப்பாக அவர்களுக்கு பாடம் கற்பித்துத் தந்த ஆசிரியர்களுல் உத்தமன், சங்கரசிவராமகிருஷ்ணன், விருமாண்டி, முத்துக்கிருஷ்ணன், சுப்பையா ஆகிய ஐந்துபேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த சிறப்பு நிகழ்வுக்கு *மக்கள் மருத்துவர்* டாக்டர். செல்வராஜ் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் சின்னராஜா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜோதி, கல்வியாளர் செல்வகுமார பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தேனி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் மோகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். பழைய மாணவர்களின் சார்பில் பள்ளிக்கு தற்சமயம் 4 மின்விசிறிகள் வழங்கினர். இனிவரும் காலங்களில் பள்ளி வளர்சியில் பங்கேற்பதாக உறுதியளித்தனர். வட்டார வளமைய வளாகத்தில் நினைவு மரக்கன்று நடப்பட்டது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!