by Vignesh Perumal on | 2025-04-23 10:26 AM
தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை தேனி மாவட்ட தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 26 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், இந்த கஞ்சாவை வழங்கியவர் ஒடிசா மாநிலம் கொராபுட் மாவட்டம், ஜெய்பூரைச் சேர்ந்த சுராஜ் சிங் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தேனி மாவட்ட காவல் ஆய்வாளர் திரு. பார்த்திபன் மற்றும் உதவி ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் தலைமையிலான சிறப்பு போலீஸ் குழு ஒடிசாவுக்கு விரைந்தது. அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், கடந்த 20.04.2025 அன்று குற்றவாளி சுராஜ் சிங்கை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுராஜ் சிங்கை ஜெய்பூர் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் இடம் பெயர்வு வாரண்ட் பெற்று தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இன்று (ஏப்ரல் 23) அவரை பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 10 மாதங்களில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த கஞ்சா விற்பனையாளர்கள் மீது தேனி மாவட்ட போலீசார் எடுக்கும் ஆறாவது அதிரடி நடவடிக்கை இதுவாகும். இதுவரை இந்த நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 16 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்ட காவல்துறையின் இந்த தொடர் நடவடிக்கைகள் கஞ்சா கடத்தல் கும்பல்களுக்கு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!