| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்....!!!பிரதமர் மோடி அவசர ஆலோசனை....!!!

by Vignesh Perumal on | 2025-04-23 09:47 AM

Share:


பஹல்காம் தீவிரவாத தாக்குதல்....!!!பிரதமர் மோடி அவசர ஆலோசனை....!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடன் பிரதமர் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

பஹல்காம் தாக்குதல் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் நேரடியாக கேட்டறிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடூரமான தாக்குதலின் பின்னணி மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பஹல்காம் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவம் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. இந்த தாக்குதலால் பஹல்காம் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

பிரதமரின் இந்த அவசர ஆலோசனை மற்றும் பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கைகள், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களை விரைவில் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment