by Vignesh Perumal on | 2025-04-22 05:15 PM
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று (ஏப்ரல் 22, 2025) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு சுற்றுலா பயணி உயிரிழந்தார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆறு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் என்னவென்றால், பஹல்காம் பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமான பைசரான் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலர் சிக்கிக்கொண்டனர்.
இந்த தாக்குதலில் ஒரு சுற்றுலா பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஆறு பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான "தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்" (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீதான இந்த திடீர் தாக்குதல் காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!