by Vignesh Perumal on | 2025-04-22 01:27 PM
மும்பை அருகே ஓடும் பேருந்தில் ஒரு ஜோடி தகாத உறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்வேலில் இருந்து கல்யாண் நோக்கி சென்ற மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கூட்டம் குறைவாக இருந்த அந்த பேருந்தின் பின் இருக்கையில் ஒரு ஆணும் பெண்ணும் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். பேருந்து போக்குவரத்து நெரிசலில் நின்றபோது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக தனது செல்போனில் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் (MSRTC) கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. பேருந்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தும் கண்டுகொள்ளாத பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் ஏன் இந்த செயலை தடுக்கவில்லை என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது இடத்தில் தகாத உறவில் ஈடுபட்ட அந்த ஜோடி குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று MSRTC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!