by Vignesh Perumal on | 2025-04-22 01:07 PM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி மீது இரு குடும்பத்தினரும் காவல் நிலையம் முன்பே தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரது காதலுக்கும் இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஜோடி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து திருமணம் செய்து கொண்டனர்.
காவல் நிலையத்தில் வைத்து திருமணம் முடிந்த பின்னர் வெளியே வந்த அந்த இளம் ஜோடியை இரு குடும்பத்தினரும் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பொதுமக்கள் அதிர்ச்சியுடன் இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை விலக்கி, இளம் ஜோடியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே இடத்தகராறு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக மோதல் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோதல் காரணமாகவே காதலர்கள் திருமணம் செய்துகொள்வதை இரு வீட்டாரும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
தற்போது போலீசார் அந்த காதல் ஜோடியை பாதுகாப்பாக வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!