by Vignesh Perumal on | 2025-04-22 12:27 PM
தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு மிகுந்த கவனத்துடன் கருத்தில் கொண்டுள்ளது என்று கூறினார். இது தொடர்பாக முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்துடன் பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவகாரத்தில், அரசு உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் உறுதியளித்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!