by Vignesh Perumal on | 2025-04-22 12:03 PM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சித்திரை மாத பௌர்ணமி திதி 28-ம் தேதி (மே 11, 2025) இரவு 8:47 மணிக்குத் தொடங்குகிறது. இந்த பௌர்ணமி திதி 29-ம் தேதி (மே 12, 2025) இரவு 10:43 மணி வரை நீடிக்கும்.
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பௌர்ணமி நாளில் முழு நிலவு பிரகாசிக்கும் வேளையில், தெய்வீக ஆற்றல் மிகவும் வலிமையாக இருக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த நேரத்தில் கிரிவலம் செல்வதால் ஆன்மிக ரீதியாக பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எனவே, பக்தர்கள் மே 11-ம் தேதி இரவு 8:47 மணி முதல் மே 12-ம் தேதி இரவு 10:43 மணி வரையிலான காலகட்டத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் இந்த நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது கிரிவல பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளலாம்.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.