by Vignesh Perumal on | 2025-04-22 11:28 AM
வக்ப் திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, (ஏப்ரல் 22, 2025) சென்னையில் மாபெரும் பேரணி மற்றும் ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமுமுக தெரிவித்துள்ளது.
வக்ப் சொத்துகளை அழிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது என்றும் தமுமுக குற்றம்சாட்டியுள்ள வக்ப் திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
தமுமுக தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நாளை மாலை 4:30 மணிக்கு சென்னை மண்ணடி தம்புசெட்டி தெரு சந்திப்பில் இருந்து பேரணி புறப்படும். இந்தப் பேரணி ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான நிகழ்வைப் பதிவு செய்யுமாறு ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்களுக்கு தமுமுக அழைப்பு விடுத்துள்ளது. செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட நிபுணர்களை அனுப்பி வைக்குமாறு தலைமை அலுவலக செயலாளர் ஐ.அமீன் அஹமத் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!