by Vignesh Perumal on | 2025-04-22 10:39 AM
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் த.தெ.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
வரும் மே 12-ம் தேதி சித்ரா பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்களின் வருகையை முன்னிட்டு பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: "சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளில் 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் எளிதாக இறங்கி கிரிவலப் பாதையை அடைய முடியும்.
அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் கிரிவலப் பாதையைச் சுற்றியுள்ள இடங்களில் பக்தர்களின் தேவைக்கேற்ப போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். சுகாதாரமான முறையில் இவை பராமரிக்கப்படும்.
மேலும், கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்குபவர்கள் முறையாக அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும். வழங்கப்படும் உணவுகள் தரமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும். தரமற்ற உணவு வழங்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கிரிவலப் பாதையில் போதுமான எண்ணிக்கையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
எனவே, சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு வரும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் த.தெ.தர்ப்பகராஜ் கேட்டுக்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!