by Vignesh Perumal on | 2025-04-21 09:00 PM
நீலகிரி மாவட்டத்திற்குள் வாகனங்கள் நுழைய இனி 4 முக்கிய சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் கட்டாயமாக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை மாவட்ட எல்லைகளில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, நாளை (ஏப்ரல் 22, 2025) முதல் கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி மற்றும் மேல் கூடலூர் ஆகிய 4 முக்கிய சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் சரிபார்க்கும் நடைமுறை நீக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்றும், இந்த 4 சோதனைச் சாவடிகளில் மட்டுமே அவை சரிபார்க்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு சற்று எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ? கேரள அரசு அந்தர் பல்டி!
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !