by admin on | 2025-01-30 01:26 PM
2009 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாதப் படையால் தமிழீழத் தமிழர்கள் இனக்கொலை செய்யப்பட்ட போது, போரை நிறுத்தவும் இனக்கொலையைத் தடுக்கவும், நெருப்பிட்டுக்கொண்ட தன்னுடலை ஆயுதமாக்கிப் போராட நம்மை வலியுறுத்தி உயிரீகம் செய்தான் வீரத்தமிழன் முத்துகுமார். அந்தத் தமிழ் மறவன் முத்துகுமார் நினைவுநாளான நேற்று தமிழ்த் தேச மார்க்சியக் கழகம் சார்பில் தேனி அம்பேத்கர் திடலில், தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் உயிரீகம் செய்த ஈகியர்க்குச் செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், மொழிப் போர் ஈகியர் படங்களும், தமிழீழ இனக்கொலையைத் தடுக்க வலியுறுத்தி உயிரீகம் செய்த முத்துகுமார் உள்ளிட்ட ஈகியர் படங்களும், எழுவர் விடுதலைக்காகவும் மூவர் தூக்கினை எதிர்த்தும் உயிரீகம் செய்த செங்கொடி ஆகியோர் உருவப்படங்களும் வைத்து மலர்த்தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ் மொழி மற்றும் இனக்காப்பு ஈகியர் செவ்வணக்க நிகழ்வுக்கு தமிழ் மக்கள் உரிமை முன்னணி அமைப்பாளர் மதியவன் இரும்பொறை தலைமை தாங்கினார். தமிழ்த் தேச மார்க்சியக் கழகத்தின் அமைப்பாளர் உதயசங்கர், மாவட்டச் செயலாளர் தோழர் பிரதீப் மற்றும் சட்ட அறிவுரைஞர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத்தின் மாவட்டசெயலாளர் பூ.மணிகண்டன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் தேனி ராயன், நாட்டுமாடு நலச் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் கலைவாணன், புரட்சித் தமிழர் கட்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தினேசு மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டு வீரவணக்க உரையாற்றினர்.
- தமிழ்த் தேச மார்க்சியக் கழகம்
#தமிழ்_மக்கள்_உரிமை_முன்னணி
29.01.25
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!