by Vignesh Perumal on | 2025-04-21 03:50 PM
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான போலீசார், திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆதரவின்றி சுற்றித் திரிந்த 60 வயது மூதாட்டி ஒருவரை மீட்டனர்.
அத்திக்கோம்பையைச் சேர்ந்த முருகேசனின் மனைவி மாயக்காள் என்பவர் ஆதரவின்றி சுற்றித்திரிந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரைப் பாதுகாப்பாக மீட்டு, திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள நகர்ப்புற வீடற்ற காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!