| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மர்மமான முறையில் முதியவர் பலி....! எங்கன்னு தெரியுமா....?

by Vignesh Perumal on | 2025-04-21 12:17 PM

Share:


மர்மமான முறையில் முதியவர் பலி....! எங்கன்னு தெரியுமா....?

திண்டுக்கல், மேற்கு ரத வீதியில் உள்ள அரசமரம் அருகே மவுன்ஸ்புரம் 4-வது தெருவில் மண்பானை கடை நடத்தி வந்த ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஞானசேகர் (70) என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த ஞானசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இறந்த ஞானசேகர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் சம்பவ இடத்தில் தினமும் இரவு தங்குவது வழக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவர் மூக்கு, தலை மற்றும் நெற்றியில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனால் இது சந்தேக மரணமாக கருதப்பட்டு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார், ஞானசேகர் எப்படி இறந்தார், அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஞானசேகருக்கு யாரேனும் எதிரிகள் இருந்தார்களா அல்லது வேறு ஏதும் காரணங்கள் இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment