by Vignesh Perumal on | 2025-04-21 10:43 AM
சென்னை, வண்டலூரை அடுத்த தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, பின்னர் அவருக்கு கருகலைப்பு செய்த உதவிப் பேராசிரியர் ராஜேஸ்குமார் (45) கைது செய்யப்பட்டுள்ளார்.
கருகலைப்பு செய்யப்பட்டபோது மாணவிக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், உதவிப் பேராசிரியர் ராஜேஸ்குமாருக்கும் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. ராஜேஸ்குமார் மாணவியை கர்ப்பமாக்கிய நிலையில், இருவரும் சேர்ந்து கருகலைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றை அணுகியுள்ளனர்.
கருகலைப்பு நடைபெற்ற தனியார் மருத்துவமனையிலும் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் ராஜேஸ்குமாருக்கு கடந்த மாதம் தான் திருமணம் நடந்துள்ளது என்ற அதிர்ச்சியான தகவலும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்திலும், மாணவர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் இதுகுறித்து உள்விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், பேராசிரியர் ராஜேஸ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மாணவி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ? கேரள அரசு அந்தர் பல்டி!
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!