| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் கலெக்டர் ஷஜீவனா விடம் மனு கொடுத்துள்ளனர்.

by admin on | 2025-01-30 08:14 AM

Share:


தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் கலெக்டர் ஷஜீவனா விடம் மனு கொடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேருராட்சி தலைவராக தமிழ்செல்வி என்பவர் செயல்பட்டு வருகின்றார்.இவர் மீது தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 40,A-

ன் கீழ் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம்

பிரிவு 51-ன்கீழ் நம்பிக்கை இல்லா

தீர்மானம் நிறைவேற்றிட வேண்டி கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைத்து தேனி கலெக்டரிடம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர். மேலும் மேலும்

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் கடந்த 32 மாதங்களாக மன்ற அவசரக்கூட்டம் மற்றும் மாதாந்திர மன்ற கூட்டம் உரிய

சட்ட விதிகளின்படி முறையாக நடைபெறவில்லை என்றும், மற்ற கவுன்சிலர்களின்

வார்டுகளுக்கு தேவையான அத்தியாவசிய தேவையான அடிப்படை பணிகள் செய்யவில்லை என்றும், மார்ச்-2022 முதல் பேரூராட்சியின் வளர்ச்சித்திட்டம்

மற்றும் பேரூராட்சிக்கு வருவாய் ஈட்டக்கூடிய திட்டங்கள் குறித்து கடந்த 32 மாதங்களாக மன்ற கூட்டங்களில் விவாதிக்கவில்லை என்றும், பேரூராட்சிக்கு கட்டுப்பட்ட 1 முதல் 15 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க குடிநீர்

திட்டத்தினை இதுவரை செயல்படுத்தாமலும், செயல்படுத்த முயற்சி

செய்யாமலும், குடிநீர் பிரச்சனை சம்மந்தமாக பகுதி மன்ற கூட்டங்களில் நிறைவேற்றிய தீர்மானங்களையும் மதிக்கவில்லை என்றும்,மன்ற உறுப்பினர்களின் வழிமொழிதலை

மதிக்காமல் தலைவர் மற்றும் செயல் அலுவலர் சட்ட விரோதமான செயல்களை

செய்துள்ளதாகவும்,கடந்த இரண்டரை

வருடங்களாக ஆண்டின் வருமான தணிக்கை அறிக்கை மற்றும் செலவு கணக்குகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும்,

மன்றத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உறுப்பினர்கள்

அனுமதியுடன் உரிய சட்ட விதிகள் படி நிறைவேற்றப்படவில்லை என்றும், பேரூராட்சியில்

முறையான ஒப்பந்தம் எதுவும் நடைபெறாமல் தலைவர் சுய ஆதாயம்

அடையும் வகையில் விதிமுறைகள் மீறப்பட்டு பேரூராட்சிக்கு நிதி இழப்பு

ஏற்படுத்தப்பட்டதாகவும்,பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக உருவாகும் வீட்டு மனைகளை அங்கீகாரம் அளிப்பதற்கு கவுன்சிலர்களின்

தீர்மானங்களும் வழிமொழிதலும் இல்லாமல் தன்னிச்சையாக பேரூராட்சி

நிர்வாகம் மற்றும் தலைவர் முடிவெடுத்து சுய ஆதாயமடைந்து

விதிமுறைகளை மீறியும் பேரூராட்சிக்கு இழப்பீடு ஏற்படும் வகையில் வீட்டு மனைகள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பொதுமக்கள் பயன்பெறும் முதல்வரின் கனவு திட்டம் மற்றும்

பேரூராட்சிக்கு வருவாய் ஈட்டும் அனைத்து நலத்திட்டங்களையும் முடக்கி, பேரூராட்சி வளர்ச்சிக்கு, வருவாய் ஈட்டக்கூடிய எந்தவொரு திட்டமும், செயல்படுத்தாமல் இருந்து வந்துள்ளதாகவும், 

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தற்காலிக பணியாளர், தூய்மை

பணியாளர்கள் தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய ஊழல் மற்றும் தொய்வு

ஏற்பட்டுள்ளது என்றும்,பேரூராட்சி நிர்வாகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத நபர்கள் சுய உதவிக்குழு மூலம் வருகைப்பதிவேடு தயார் செய்து மேற்படி

நபர்களின் ஊதியத்தை கையாடல் செய்து வருவதாகவும்,.மேலும் பேரூராட்சியின் அலுவலக பணிகளிலும், துப்புரவு

பணியாளருக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வதிலும், தேவையற்ற

விதிகளை பேரூராட்சி அலுவலகத்தில் உட்புகுத்துவதால், மாதாந்திர

கூட்டங்களுக்கு தேவையான அஜந்தாவை தயார் செய்வதில்,தலைவரின் கணவரான சௌந்தரபாண்டியன்

(அரசுப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிபவர்) என்பவரின்

குறுக்கீடு மற்றும் தலையீடு அதிகம் இருப்பதாகவும், கெங்குவார்பட்டி பேரூராட்சி

மன்றத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்

மு.தமிழ்ச்செல்வியின் உத்தரவின்பேரில் அவரது

கணவர் செயல்பட்டு வருவதாகவும், மேலும்.அஜந்தா பதிவேடு - மினிட்ஸ் நோட்டு - வார்டு உறுப்பினர்களின்

கோரிக்கைகளையோ, அத்தியாவசிய பணிகள் குறித்து விவாத பொருளில்

இடம் பெறச்செய்யாமல் தன்னிச்சயாக தீர்மானங்களை சேர்த்தும், நீக்கியும்,தொடர்ந்து சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதால் ,எத நலத்திட்டங்களையும் செயல்படுத்த விடாமல்தடுத்துவருவதாகும் மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டி மன்றத்தலைவர்

மு.தமிழ்ச்செல்வி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை

கொண்டு வரகோரி கவுன்சிலர்கள்

பெ.ராமர்,இ.பாலாஜி,

ச.ஈஸ்வரி,பா.உமா,

மு.ராஜம்மாள் ,

பா.மொ.பொன்மணி,

ர.பவானி,ப.இக்பால் நிஷா,த.ஞானமணி,

பெ.ராஜா,

கா.தினேஷ்குமார்,

வீராஜவேல்,

வா.பெருமாயம்மாள்,

செ.சாந்தி,ஆகியோர் தேனி கலெக்டர் ஷஜீவனா விடம் மனு கொடுத்துள்ளனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment