by Vignesh Perumal on | 2025-04-21 09:52 AM
மதுரையில் விரைவில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். இந்து முன்னணி சார்பில் இந்த முருக பக்தர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை இந்து முன்னணியின் முக்கிய நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கினர். அப்போது மாநாட்டின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து அவர்கள் ரஜினிகாந்த்துக்கு விளக்கினர்.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதற்கு ஒரு கும்பல் சதி செய்வதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி வருகிறது. இதனை கண்டித்தும், முருகப்பெருமானின் பெருமையை பறைசாற்றும் வகையிலும் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. ஐந்து லட்சம் முருக பக்தர்களை இந்த மாநாட்டில் பங்கேற்க வைக்க இந்து முன்னணி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக வீடு வீடாக சென்று பக்தர்களை அழைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் இந்த அழைப்பிதழை பெற்றுக்கொண்டதாகவும், மாநாட்டிற்கு வருவது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்ததாக இந்து முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் இந்த மாநாட்டில் பங்கேற்றால், அது முருக பக்தர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!