by aadhavan on | 2025-04-20 01:06 PM
சி.எம்.ஆதவன்
மதுரை கோவில் கோவில்பாப்பாகுடி கிராமத்தில் வட மஞ்சுவிரட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.
கோவில்பாப்பாகுடி உச்சி மாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வட மஞ்சுவிரட்டு போட்டியில் 15க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் ஒன்பது பேர் அடங்கிய வாலிபர்கள் குழு காளைகளை அடக்கியது.
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வட மஞ்சுவிரட்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு காளையும் 20 நிமிடங்கள் களத்தில் இருக்க வேண்டும். அந்த நேரத்திற்குள் களத்தில் இருக்கும் ஒன்பது வீரர்கள் காளையினை அடக்க வேண்டும். இதுவே மஞ்சுவிரட்டு போட்டி.
பாரம்பரியமாக பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போட்டிகளை காண, மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். தேனி சிவகங்கை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் கொண்டு வந்து போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன.
காயமடைந்த 6க்கும் மேற்பட்ட வீரர்கள் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அலங்காநல்லூர் காவல் சரக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!